Saturday, January 2, 2016

"What Dreams May Come" நமது கனவுகள் வெறும் கனவுகள் அல்ல....அவை இனி தொடர்ந்து......வரும்.


"What Dreams May Come" மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவு ஒரு
கருத்தை இந்த திரைப்படம் சொல்ல முயற்சிக்கிறது,
மனிதர்களின் இறப்புக்கு பின்பு என்னதான் நடக்கிறது என்பதை பற்றிய ஒரு கோணத்து பார்வை என்றும் கூறலாம். அல்லது இப்படி இருக்க முடியாது எனின் வேறு எப்படித்தான் இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பிய ஒரு
திரைப்படமாகவும் இதை பார்க்கலாம்.
நமது மனதை நிச்சயம் கொஞ்சம் அசைத்து பார்த்து விடக்கூடிய வலிமை இந்த
படத்துக்கு நிச்சயம் உண்டு,
இது இப்படித்தானா என்ற கேள்வியை அல்லது பதிலை எமக்குள் இது கிளப்பி விடும்.
இப்படம் சொல்லவரும் செய்தி  உண்மையிலேயே  உண்மை என்பது இவ்வளவு அழகானதா? என்று வியக்க வைக்கிறது.
 எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் இந்த படம் காட்டும் காட்சிகள் நம்மை வெகுவாக ஈர்த்துவிடும், அவ்வளவு அழகாக பிரமாண்டமாக காட்சிகள் வர்ண கலவைகளால் அள்ளி வீசி வரையப்பட்டுள்ளது, அதற்காகவே ஆஸ்கர் பரிசும் பெற்றது,
கதையின் முடிச்சை நான் கூறினால் அதன் சுவாரசியத்தை நான் உங்களிடம்
இருந்து பறிக்கும் தீய செயலை செய்தவன் ஆவேன் ,எனவே ஓரளவு கோடி காட்ட முயற்சிக்கிறேன்,