கோர்ட் ....மராத்தி ஹிந்தி குஜராத்தி ஆங்கிலம் எல்லாம் கலந்த கலவை
2015 இல் வெளிவந்த Court ஒரு மராத்தி திரைப்படம். வழக்கமாக நான் ரசித்த படங்களை பற்றி எல்லாம் வாய்க்கு வந்த படி அளந்து கொண்டு வரும் எனக்கு இந்த படம் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்து விட்டது.
வழக்கமான திரைப்படங்களுக்கு உரிய சட்ட திட்டங்களும் அல்லது கற்பனைகளும் .எதிர்ப்பார்ப்புக்களும் இந்த படத்துக்கு பொருந்தாது .எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விட்டது Court கோர்ட்.
இது எந்த மொழி படம் என்று அறுதியாக கூறமுடியாதோ அதே போலவே இது என்ன படம் என்றும் இலகுவாக கூறி விட முடியாது.
இந்த படத்தில் வரும் எந்த காட்சியும் ஒரு இலகுவான கவிதையை அல்லது காதலை கூறவில்லை. பின்னணி இசைகூட கிடையாது.
காட்சிகளில் காமராவோ இயக்குனரோ வசனகர்த்தவோ எதுவும் கிடையாது என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.
நீதிமன்றங்களையும் தெருவோரங்களையும் சந்தைகளையும் நாம் எப்படி அன்றாடம் பார்த்துக்கொண்டே கடந்து போய்கொண்டு இருக்கிறோமோ அதே போன்று இந்த திரைப்படம் உள்ளது, இதில் என்ன அதிசயம் இருக்கிறது நீங்கள் எண்ணுவது புரிகிறது.
வழக்கமாக நாம் காணும் நீதிமன்றங்களும் தெருவோரங்களும் சந்தைகளும் இதுவரை இந்த திரையில் கண்டது போல் இதுவரையில் காணவில்லை.
இது எந்தவிதமான செய்தியையும் கூட புதிதாக தரவில்லை . ஆனால் எமக்கு நன்றாகவே தெரிந்து சகிக்க பழகிவிட்ட மிக சாதாரண விடயங்களை மீண்டும் எமது கண் முன்னே கொண்டுவந்துவிட்டு தன்பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கிறது.
அவற்றை பார்ப்பதுவும் அதை பற்றி சிந்திப்பதையும் கூட வலியுறுத்தவில்லை. இந்த திரைப்படத்துக்குத்தான் காமெரா இயக்குனர்கள் வசனங்கள் பின்னணி இசை என்று எதுவுமே இல்லையே?