Sunday, March 20, 2016

நான் கடவுள் ! கதாநாயகியை கதாநாயகன் கௌரவ கொலைசெய்வதை காவியப்படுத்திய ஜெயமோகன் + பாலா GANG

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான (honer killing) ஆணவக் கொலைகள் தொடர்கிறது. அதை கண்டித்து அதற்கெதிரான முழக்கத்தை ஓங்கி ஒலிக்க பெரிய கட்சிகளோ அல்லது சினிமா பிரபலங்களோ தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்த சமயத்தில் பெண்கள் மீதான உச்சபட்ச பயங்கரத்தை நியாயப்படுத்தி ஒரு தமிழ் திரைப்படம் வெளியாகி ஓடிவிட்டது, இன்றுவரை அந்த திரைப்படத்தின் மையக்கருத்து பற்றி சரியான விமர்சனம் வெளிவரவே இல்லை.
நான் கடவுள்....ஆம்பிளை கடவுள்.  அதாவது  பெண்களின் கற்பு கௌரவம் மற்றும் பெண்மை அல்லது பாரம்பரியம் இன்னும் என்னனவோ காரணங்கள் இருப்பதாக ஆண்கள் கருதினால் அந்த பெண்ணை  கொல்வது அவளுக்கு நீங்கள் செய்த சேவையாகும். இதுதான் ஜெயமோகன் எழுதி பாலா இயக்கிய நான் கடவுள் படத்தின் செய்தியாகும்.

என்னன்னவோ காரணங்கள்,  இந்துமதம், சந்தன தர்மம், அஹம் பிரமச்வாமி, சுகம் மனித இறைச்சி என்று பித்தலாட்டங்கள் எல்லாம் படம் பிடித்தாலும் சொல்ல வந்த கருத்து என்னவென்றால்: கதாநாயகியின் புனிதத்தை காப்பாற்ற அவளுக்கு பூலோகத்தில் இருந்து அந்த ஆம்பிள சுவாமி விடுதலை கொடுத்தான்.
இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெண்களுக்கு கொடுக்கும் மரணதண்டனைதான் அந்த வரம்.
 பெண்கள் மீதான கௌரவகொலை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்கள் மட்டுமல்ல, இதுவரை உலகம் கண்டிருந்த நூற்று
கணக்கான சமயங்கள் கலாச்சாரங்கள் தோறும் காலத்துக்கு காலம் இடம்பெற்று இருந்தமை வரலாற்று சோகம்.
இந்த காட்டுமிராண்டித்தனம் இன்னும் இந்தியா பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் தொடர்வது மனித சமுதாயம் வெட்கி வேதனை படவேண்டிய விடயமாகும்.

தெரிந்தோ தெரியாமலோ இயக்குனர் பாலா இந்த தவறை செய்துள்ளார் என்று நான் எண்ணவில்லை. தெரிந்தே மிகவும் தெளிவாக இந்த கௌரவ கொலைக்கு ஒரு சனதான தார்மீக சாயம் பூசியுள்ளார். இதன் வசனகர்த்தா மிகமோசமான இந்துத்வா பிரசாரகர் ஜெயமோகன். அவரின் கொள்கை இதுதான் என்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. நாசிகள் நாசிகளாக இருப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை,.
எம்மை ஏமாற்றியவர் இயக்குனர் பாலாதான். இனியாவது  இயக்குனர்  பாலா தனது தவறுக்கு பிராயச்சித்தம் செய்வவேண்டும்.
நான் கடவுள் படத்தை பற்றி எதுவுமே சொல்ல தோன்றவில்லை .
எத்தனையோ நல்ல காட்சிகள் எல்லாம் இருந்தும் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல பெண்ணை கொலை செய்வது இந்து தர்மத்தை காப்பதற்காக அல்லது அவருக்கு விடுதலை கொடுப்பதாக காட்டியது மிக
பெரும் குற்றம்.
தமிழ் சினிமா பெண்களை சாட்சாத் அம்பிகை ஸ்தானத்தில் வைப்பதாக கூறிக்கொண்டு ஒரு கடைத்தர மஞ்சள் பட ரேஞ்சுக்கு காட்டுவது அந்த கால எம்ஜியாரில் இருந்து தொடர்கிறது.

பழைய பாலச்சந்தர் பெண்களை வேண்டும் என்றே கெட்டுபோவதாக காட்டி Erotic blue film எடுத்துவிட்டு... பின்பு இந்து அல்லது பாரத தர்மத்தை காப்பதற்காக அவளை கொன்றுவிடுவார்.

இந்த புதிய பாலாவும் அதைதான் இன்னும் பலபடிகள் முன்னேறி பயங்கரமாக கழுத்தை கடித்து கொன்று விடுகிறார்.
நமக்கு என்னனவோ விபரீதமான சந்தேகம் எல்லாம் வருகிறது. தம்பி பாலா RSS சிடம் அல்லது வேறு சமய பயங்கரவாதிகளிடம் கொள்கை பரப்பு
செயலாளர் பதவி பெற்று விட்டாரோ?        

Tuesday, February 16, 2016

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்....ஒரு மசாலா படம் மூளைக்கு இவ்வளவு வேலை கொடுக்கிறதே?


வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்....இப்படி  ஒரு பெயரில் படம். மக்களின் Unconscious Mind இல்  மிகவும் ஆழமாக பதிந்துள்ள ஒரு அபிப்பிராயத்தையே படத்தின் பெயராக வைத்த  புத்திசாலித்தனத்தை மெச்சாமல் இருக்கவே முடியாது. அதே சமயம் கொஞ்சம் அமைதியை கிளறி விடும் சமுகநீதி provoking வாசமும் இந்த பெயரில் மறைந்திருக்கிறது.

நகைச்சுவை படம் போல தெரிந்தாலும் அடிப்படையில் இது ஒரு feel good மூவிதான். இவ்வளவு சுத்தமான ஒரு அழகான ஒரு படம் தமிழில் மிகவும் அபூர்வமாகதான் வரும். இதில் ஆபாசமான ஒரு காட்சியும் இல்லை. சண்டைகள் வன்முறை போன்றவை கொஞ்சம் இருந்தாலும் எந்த காட்சியும்
மனதை உறுத்தும் அளவுக்கு இல்லவே இல்லை. பலகாட்சிகளில் எங்கே வழக்கமான பயங்கர சண்டை குருர காட்சிகள் வந்துவிடுமோ என்று பயப்பட வைத்து கொஞ்சம் கூட அபஸ்வரம் தட்டாமல் கத்தி மேல் நடப்பது போல
காட்சிகளை அமைத்துள்ளார்கள்.

Saturday, January 2, 2016

"What Dreams May Come" நமது கனவுகள் வெறும் கனவுகள் அல்ல....அவை இனி தொடர்ந்து......வரும்.


"What Dreams May Come" மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவு ஒரு
கருத்தை இந்த திரைப்படம் சொல்ல முயற்சிக்கிறது,
மனிதர்களின் இறப்புக்கு பின்பு என்னதான் நடக்கிறது என்பதை பற்றிய ஒரு கோணத்து பார்வை என்றும் கூறலாம். அல்லது இப்படி இருக்க முடியாது எனின் வேறு எப்படித்தான் இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பிய ஒரு
திரைப்படமாகவும் இதை பார்க்கலாம்.
நமது மனதை நிச்சயம் கொஞ்சம் அசைத்து பார்த்து விடக்கூடிய வலிமை இந்த
படத்துக்கு நிச்சயம் உண்டு,
இது இப்படித்தானா என்ற கேள்வியை அல்லது பதிலை எமக்குள் இது கிளப்பி விடும்.
இப்படம் சொல்லவரும் செய்தி  உண்மையிலேயே  உண்மை என்பது இவ்வளவு அழகானதா? என்று வியக்க வைக்கிறது.
 எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் இந்த படம் காட்டும் காட்சிகள் நம்மை வெகுவாக ஈர்த்துவிடும், அவ்வளவு அழகாக பிரமாண்டமாக காட்சிகள் வர்ண கலவைகளால் அள்ளி வீசி வரையப்பட்டுள்ளது, அதற்காகவே ஆஸ்கர் பரிசும் பெற்றது,
கதையின் முடிச்சை நான் கூறினால் அதன் சுவாரசியத்தை நான் உங்களிடம்
இருந்து பறிக்கும் தீய செயலை செய்தவன் ஆவேன் ,எனவே ஓரளவு கோடி காட்ட முயற்சிக்கிறேன்,