Tuesday, December 18, 2018

Court மராத்தி ... திரைத் தாலாட்டுக்களில் இருந்து ஒரு .... .. விழிக்கலாம் முடிந்தால்?

கோர்ட் ....மராத்தி ஹிந்தி குஜராத்தி ஆங்கிலம் எல்லாம் கலந்த கலவை
2015 இல் வெளிவந்த  Court  ஒரு மராத்தி திரைப்படம். வழக்கமாக நான் ரசித்த  படங்களை பற்றி எல்லாம் வாய்க்கு வந்த படி அளந்து கொண்டு வரும் எனக்கு இந்த படம் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்து விட்டது.
வழக்கமான திரைப்படங்களுக்கு உரிய சட்ட திட்டங்களும் அல்லது கற்பனைகளும் .எதிர்ப்பார்ப்புக்களும் இந்த படத்துக்கு பொருந்தாது .எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விட்டது Court கோர்ட்.
இது எந்த மொழி படம் என்று அறுதியாக கூறமுடியாதோ அதே போலவே இது என்ன படம் என்றும் இலகுவாக கூறி விட முடியாது.
இந்த படத்தில் வரும் எந்த காட்சியும் ஒரு இலகுவான கவிதையை அல்லது காதலை கூறவில்லை. பின்னணி இசைகூட கிடையாது.
காட்சிகளில் காமராவோ இயக்குனரோ வசனகர்த்தவோ எதுவும் கிடையாது என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.
நீதிமன்றங்களையும் தெருவோரங்களையும்  சந்தைகளையும் நாம் எப்படி அன்றாடம் பார்த்துக்கொண்டே கடந்து போய்கொண்டு இருக்கிறோமோ அதே போன்று இந்த திரைப்படம் உள்ளது, இதில் என்ன அதிசயம்  இருக்கிறது நீங்கள் எண்ணுவது புரிகிறது.
வழக்கமாக நாம் காணும் நீதிமன்றங்களும் தெருவோரங்களும் சந்தைகளும் இதுவரை இந்த திரையில் கண்டது போல் இதுவரையில் காணவில்லை.
இது எந்தவிதமான செய்தியையும் கூட புதிதாக தரவில்லை . ஆனால் எமக்கு நன்றாகவே தெரிந்து  சகிக்க பழகிவிட்ட மிக சாதாரண விடயங்களை மீண்டும் எமது கண் முன்னே கொண்டுவந்துவிட்டு தன்பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கிறது.

அவற்றை பார்ப்பதுவும் அதை பற்றி சிந்திப்பதையும் கூட வலியுறுத்தவில்லை. இந்த திரைப்படத்துக்குத்தான் காமெரா இயக்குனர்கள் வசனங்கள் பின்னணி இசை என்று எதுவுமே இல்லையே?

Monday, November 5, 2018

தமழ் சினிமாவில் பொற்காலம் ..... எண்பதுகள்தான்


Shalin Maria Lawrence : தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பொற்காலம்
என்றால் அது எண்பதுகள்தான்.தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தன் நாடாகத்தன்மையில் இருந்து யதார்த்த சினிமாவிற்கு மாறி கொண்டிருந்த காலம் அது.ஒரு பெண் தன் ஒப்பனையெல்லாம் களைத்து இயல்பு நிலையில் எவ்வளவு எளிமையாக இருப்பாளோ அத்தனை எளிமையும் ,ரசனையும் ,ரம்மியமுமாக இருந்தது தமிழ் சினிமா அப்பொழுது. உதாரணத்துக்கு நடிகை ஷோபாவை போல . Simple ,fresh and deep.
எழுபதுகளின் கடைசியில் இருந்து என்பதுகளிளின் துவக்கம் வரை பல புது இயக்குனர்கள் புது கலைகளோடு தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக படர ஆரம்பித்தார்கள்.மகேந்திரன்,ஆபாவணன் ,பாலு மகேந்திரா ,கே.விஜயன்,பாரதிராஜா ,பாக்கியராஜ்,t. ராஜேந்தர் ,எஸ் எ சந்திரசேகர் என்று தமிழ் சினிமாவில் பூசி இருந்த டிஸ்டம்பரை கலரை அழித்து கொண்டிருந்தார்கள்...தங்கள் வண்ணங்களால் நிரப்பி கொண்டிருந்தார்கள்.
பல கலை படங்களை உருவாக்கினார்கள் ,எளிய மனிதர்களின் சினிமாவை உருவாக்கினார்கள்.
நண்டு ,மெட்டி ,உதிரி பூக்கள் ,பசி ,அவள் அப்படிதான் போன்ற art film பாணியில் உள்ள கலை படங்கள் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் தண்ணீர் தண்ணீர் ,தூரத்து இடி முழக்கம் ,சட்டம் ஒரு இருட்டறை என்று மக்கள் அரசியல் பேசிய படங்கள்.
அந்த வரிசையில்தான் எண்பதுகளில் கம்யூனிசம் பேசிய படங்கள் அதிகம் வந்தன.