என்னதான் உலகம் அவரை நோக்கி வந்தாலும் அவரோ தனது தனது இருப்பில் தானாக தான் மட்டுமாகவே இருந்தார். உண்மையில் பிரபஞ்சம் இழுத்த இழுப்புக்கு இழுபட்டு கொண்டிருந்தார்.
ஒரு பணகாரியின் கார் வந்து அவரை மோதியது.
பின்பு அந்த பணக்காரியின் காதலையும் பெற்றார் ஆனால் அது அவருக்கு தெரியவே இல்லை.
அவளின் மரணப்படுக்கையில் இருக்கும் கணவனோ கார்டனரை தனது ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகவே கொண்டாட தொடங்கி விட்டார்.
கார்டனர் கேட்டால் எதுவும் செய்ய தயாராகவே இருவரும் இருந்தனர்.
கார்டனரின் மிக சாதரணமான வார்த்தைகள் அவரின் அசையாத அமைதி எல்லாம் சேர்த்து அவரை ஒரு மேதை போல காட்டியது.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஊடகங்கள் எல்லாம் கூட கார்டனரை மொய்க்க தொடங்கி விட்டது. ஆனாலும் இத்தனைக்கும் கார்டனரோ பொய் ஒன்றும் சொல்லவில்லை நடிக்கவும் இல்லை.
மிக சாமான்ய மனிதராக ஆனால் அளவு கடந்த அமைதியும் சாந்தமும் மிக்கவராக இருந்தார்.
ஒரு நாள் அந்த பணக்காரர் இறக்கும் நேரத்தில் தனது மனைவியை கார்டனரின் கையில் ஒப்படைத்து விட்டு இறந்து விடுகிறார்.
இதற்கும் கார்டனர் அமைதியாக நீங்கள் இப்போ இறக்க போகிறீர்கள் அதுதான் உண்மை என்று நிதானமாக கூறுகிறார். கார்டனரின் அமைதியான சுபாவம் அந்த பணக்காரருக்கு மிகபெரும் திருப்தியையும் அமைதியையும் தருகிறது.
அவரின் மனைவி கார்டரின் காதலை பெற என்னனவோ முயற்சி செய்கிறார்.
கார்டனரோ இதெற்கெல்லாம் அப்பாற்பட்டவர் போல தெரிந்தார். ஆனால்
அவரின் அண்மை அவளுக்கு ஆறுதலை கொடுக்கிறது.
அந்த பணக்காரரின் இறுதி சடங்கில் ஜனாதிபதி உட்பட பல பெரும் தலைகள் கலந்து கொண்டு பலவாறு உரை ஆற்றுகிறார்கள்.
கார்டனரோ அந்த பணக்காரரின் ஞாபகத்துக்காக அவரின் பெயர் சூட்டப்பட்ட அந்த பரந்த கார்டன் வெளியில் மெதுவாக நடந்து செல்கிறார். ஏனையோர் இறந்தவரின் மேன்மை போன்ற சமாசாரங்களை சம்பிரதயமாக பேசுகிறார்கள்...
இந்த படம் உண்மையில் எதை சொல்ல வருகிறது என்பதில் மிகபெரும் சவால் காத்திருக்கிறது.
இன்னும் சரியாக சொல்வதென்றால் இது ஒன்றையும் சொல்லவில்லை. ஆனால் வார்த்தைகளால் சொல்லி விளங்க வைக்க முடியாத ஒரு மர்ம நாடகத்தை காட்சிகளாலும் கார்டனர் பாத்திரத்தின் மூலமாகவும் வெளிப்படுத்துகிறது.
வார்த்தைகளை தாண்டிய ஒரு உலகம்!
காணும் காட்சிகளை மீறிய ஒரு உண்மை!
மனித உணர்சிகளின் ரசனையை மீறிய ஒரு அனுபவம்!
புரிந்து புரியாமல் இருக்கின்ற இந்த பிரபஞ்சத்தின் ரகசியத்தை கொஞ்சமாவது புரிய வைக்க இந்த படம் முயற்சி செய்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
எல்லாவற்றிலும் மேலாக அந்த கார்டனர் பாத்திரத்தில் பீட்டர் செல்லர்ஸ் அதுவாகவே வாழ்ந்துவிட்டார்.
இந்த படம் பார்த்து முடிந்த பின்பும் கார்டனரை நோக்கி நாம் மெதுவாக பின் தொடரும் ஒரு எண்ணம் நமக்கு வரும், அப்படி ஒரு காந்த சக்தி அந்த பாத்திரம் மேல் எல்லோருக்கும் வரும்.
மிக எளிமையிலும் எளிமையாக வாழ்வை அவர் பார்த்தார்...இல்லை இல்லை உண்மையில் அவர் ஒன்றையுமே பார்க்க வில்லை ஆனால் தானே அதுவாக இருந்தார்...
இந்த உலகத்தை பார்க்கும் அவர் அங்கே....தான் Being there!