Chicago won six Academy Awards in 2003, including Best Picture. The film was critically lauded, and was the first musical to win Best Picture since 1969.The film is based on the 1975 Broadway musical, which ran for 936 performances
Chicago சிகாகோ ! இத்திரைப்படத்தை பற்றி
எழுதும்போதே மிகவும் உற்சாகமாக இருக்கிறதுஇது ஒரு Broadway ஷோ சம்பந்தப்பட்ட கதை.
படம் பார்க்கும் போது நாம் ப்ராட்வே ஷோவில் ஒரு நாட்டிய நாடகம் போன்று அதாவது மானாட மயிலாட பாணி நிகழ்ச்சியை பார்க்கும் உணர்வு வருகிறது,
இத்திரைப்படத்தின் கதை ஒரு ஒரு பெண் கைதிகளுக்கான சிறைச்சாலையில்தான் பெரும்பாலும் நகர்கிறது,
இரு வேறு வேறு கொலை குற்ற சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் வந்து சேர்கிறார்கள் இரு இளம் அழகான நாட்டியகாரிகளும் Rene Zellwagger, Catherina Zeta Jones .
அவர்களுக்கு ஒத்தாசை புரியும் Queen Latifaa ஊழல் பெண் ஜெயில் வார்டன்.
அவர் சிபார்சில் வந்து சேர்ந்த Richard Gerry கில்லாடி வக்கீல்.
இவர்களின் கொலைகள் லேசுப்பட்டதல்ல . இவர்களின் குற்ற பின்னணியின் கடுமையை குறைப்பதற்கு முதலில் மக்களையும் பத்திரிக்கைகளையும் ஏமாற்றவேண்டும் . அதற்காக கில்லாடி வக்கீல் அளக்கும் கதைகள் நாடகங்கள் மிகவும் சுவாரசியமானவை,.
அந்த ஜெயிலில் பலவிதமான குற்றங்களை செய்த நூற்று கணக்கான பெண்கைதிகள் இருந்தார்கள்.
பணம் இருந்தால் எப்படியும் சாதகமான தீர்ப்பை பெற்று வெளியே வரலாம் என்பதை ஓரளவு வெளிப்படையாக காட்டி
இருக்கிறார்கள். ஒரு அப்பாவி ஹங்கேரிய பெண் தூக்கில் இடப்படும் காட்சி மிகவும் வேதனையானது.
அதைகூட ஒரு நாட்டிய நாடக பாணியில் காட்டிஇருப்பது மிகவும் ஒரு அற்புதமான கலைவெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும், நவரசங்களையும் பாட்டு நடனமாகவே காட்டி இருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பாகும். அதனாலதானோ என்னவோ ஆறு ஆஸ்கார் பரிசுகளையும் அளப்பெரிய வசூலையும் இது குவித்தது,
அந்த ஜெயிலில் பணம் இருந்தால் எதையும் செய்யலாம். பணம் இல்லாவிடில் உங்களுக்கு எதுவும் நடக்கலாம் 1975 இல் கதை நடப்பதாக காட்டப்பட்டு உள்ளது . இன்றும் கூட இதுதான் நிலைமை ..அதைதான் இந்த படம் நையாண்டியாக காட்டி உள்ளது .அதனாலே இது ஒருவகையில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்த படம்தான்,
முதல் கொலைகுற்ற சாட்டில் ஜெயிலுக்கு வந்த வெல்மா கெல்லி ( Catherina Zeta Jones) மிகவும் கவர்சிகரமான ஒரு குற்றவாளியாக மீடியாக்களின் வெளிச்சத்தில் இருப்பதால் அவர் விடுதலையாக கூடிய வாய்ப்பு இருபதாக எண்ணிக்கொண்டு இருக்கையில் வேறு ஒரு கவர்ச்சிப் புயல் ரொக்சி ஹார்ட் (Rene Zelwagger) வேறொரு கொலை குற்றச்சாட்டில் ஜெயிலுக்கு வந்து
சேர்கிறார். பத்திரிகைகளின் வெளிச்சத்தில் இருந்த வேல்மாவின் முக்கியத்துவம் குறைய தொடங்கி விட்டது. விளம்பர வெளிச்சம் ரொக்சியின் பக்கம் திரும்ப தொடங்கி விட்டது. வெல்மா ஜெயில் வார்டனுக்கு பணம் கொடுத்து ஒரு தந்திரம் செய்கிறாள். அதனால் ரொக்சியின் கதை கந்தலாகும் போல தெரிகிறது, ரொக்சியின் கில்லாடி வக்கீல் அதை வேறொரு தந்திரத்தால் உடைக்கிறார்.
இப்படி படம் பூராவும் வல்லவளுக்கு வல்லவள் அல்லது வல்லவன் பாணியில் பாட்டும் நடனமுமாக கதை நகர்கிறது,
நீதிமன்றம் விளம்பர வெளிச்சத்திலும் வல்லவர்களின் தந்திரங்களாலும் கோணல் மாணலாக நடக்கிறது .
நீதித்துறையும் மக்களின் அப்பிப்பிராயம் போன்றவற்றால் எப்படி எல்லாம் திசை திருப்பபடுகிறது என்பதை காட்டி பின்பு முடிவில் அந்த வக்கீல் எல்லோரையும் வழக்கை தான் நினைத்தபடி எல்லாம் உருமாற்றி இறுதியில் தனது கட்சிகாரிகளை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறார்.நீதி காப்பாற்றுகிறாரா ?
இது ஒரு சீரியஸ் படம் அல்ல நகைச்சுவையாக பத்திரிக்கைகளின் பித்தலாட்டம் மக்களின் அப்பிராயம் சிறை நிர்வாகத்தின் ஊழல் நீதித்துறையை எப்படி எப்படி எல்லாம் பணமும் கில்லாடி வக்கீல்களும் ஆட்டி படைகிறார்கள் என்பதை புரோட்வே ஷோ மாதிரி ஏராளமான பாட்டுக்கள் நடனத்தோடு கண்ணுக்கும் செவிக்கும் மட்டும் அல்லாமல் சிந்தனைக்கு சிறந்த தீனி வழங்கி உள்ளார்கள்
உதாரணமாக நீதிமன்ற தீர்ப்பு வரும் சமயத்தில் நீதிமன்ற வளாக வாசலிலே இரண்டு விதமாகவும் தீர்ப்பு வந்துள்ளதாக அச்சடிக்கப்பட்ட பத்திரிகைகளையும் வைத்துகொண்டு தீர்ப்பு வந்த அந்த நிமிடத்திலேயே அதற்குரிய பதிப்பை எடுத்து விநியோகிப்பார்கள்.
ஒரு வகையில் இது ஒரு Feel good movie என்றுதான் சொல்லவேண்டும், வாழ்க்கையில் நடக்கும் அவலங்களை நகைச்சுவையாக காட்டி எல்லாமே நாடகம்தான் ....டேக் இட் ஈசி என்பது போல....

Budget | $45 million[2] |
---|---|
Box office | $306.8 million[2] |